மீண்டும் பிரதமர் பதவிக்கு வருகிறாரா மகிந்த! ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்
இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பிரதமருக்கு அழுத்தம் இல்லை

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு முழு ஆதரவை வழங்குகின்றது.
மற்றும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ராஜபக்ச தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை.
பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை வென்ற சிறந்த அரசியல்வாதி என்றபடியால் தான் தினேஷ் குணவர்த்தனவை இந்த அரசாங்கம் பிரதமராக நியமித்தது.
இருப்பினும் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச
பொறுப்பேற்கவுள்ளார் என்பது ஒரு வதந்தி என்று நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan