இலங்கையின் அடுத்தகட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர் இலங்கை துரித அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் நாட்டில் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டுத் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சினொபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் கொள்கை அளவிலான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேவையைக் கருத்திற் கொண்டு எரிபொருள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை செயற்பாடுகளில் முதலீடு செய்வதற்கு தமது நிறுவனம் தயார் என சினொபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அங்கு தெரிவித்தனர்.
இதற்காக நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி
மத்திய நிலையமொன்றையும் சுத்திகரிப்பு நிலையமொன்றையும் அமைச்சதற்கு
தேவையான முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாம் தயார் என அவர்கள்
குறிப்பிட்டனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலையும் 6 நாட்கள் முன்

யூத் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த இந்த நடிகையை உங்களுக்கு நினைவு இருக்கா... இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
