யாழ். இந்திய விமானசேவையை தென்னிலங்கைவரை நீடிக்கும் யோசனை முன்வைப்பு
யாழ்ப்பாணத்திற்கான தற்போதைய விமான சேவையை ரத்மலானை விமான நிலையம் வரை நீடிக்கும் யோசனை இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இடம்பெற்ற பொருளாதார ஒத்துழைப்புக்கான செயல்திட்டங்கள் குறித்த இருதரப்பு கலந்துரையாடலிலேயே இந்த விடயம் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலை இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய முதலீடுகள்
குறித்த கலந்துரையாடலின் போது, இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்களும் இலங்கையில் உள்ள இடங்களுக்கு விமானங்களை இயக்க தயாராக இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
மேலும் கலந்துரையாடலின் போது, டிஜிட்டல் மயமாக்கல், மாற்று எரிசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் அதிகமான இந்திய முதலீடுகளை இலங்கை பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
