பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களித்த பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) தனது மனைவியுடன் சென்று வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி
பிரித்தானியா முழுவதும் சுமார் 40 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
கன்சா்வேட்டிவ் கட்சி
நாட்டின் புதிய அரசைத் தீா்மானிக்கக் கூடிய இந்த தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (house of commons) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்கள் தோ்ந்தெடுக்கப்படுவர்.
எனவே, 326 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மையை பெற்றால்தான் பிரித்தானியாவில் ஆட்சியமைக்க முடியும்.
இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 36 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
