யார் இந்த ரிஷி சுனக்! வெளிவரும் பல புதிய தகவல்கள்(Video)
வரலாற்றில் பல நாடுகளை தங்களின் ஆட்சியின் கீழ் வைத்திருந்த ஆங்கிலேயர்களின் நாட்டில் ஓர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இன வேறுபாடோ,நிற வேறுபாடோ வெளிகாட்டாமல் மக்களுக்கான தலைவரை தேர்தெடுக்கும் தீர்மானத்தை மக்கள் எடுத்துள்ளமையே.
இதற்கமைய கன்சர்வேடிவ் கட்சி இன்னும் வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லையென்றாலும், நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருப்பதாக கூறப்பட்டக் கருத்துக்கள் தற்போது பிரித்தானியாவில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை பெற்று தற்போது ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார்.
இவர் பதவியேற்ற பின்னர் பல தீர்மானங்கள்,கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை பலர் பதவி விலகியுள்ளனர்.இன்னும் சிலர் பெரும் ஆதரவையும் பாராட்டுக்களையும் வழங்கியுள்ளனர்.
இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்தி இன்று பேசுபொருளாக மாறியுள்ள ரிஷி சுனக் யார்? அவர் பற்றி நீங்கள் அறிந்த, அறியாத பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இந்த காணொளி,