மருமகன் ரிஷி சுனக்கின் வளர்ச்சிக்காக மாமனார் நாராயணமூர்த்தி செய்த உதவி!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனாரான தொழிலதிபர் நாராயண மூர்த்தி, தனது மருமகன் பிரித்தானிய பிரதமராக நியமிக்கப்பட்டமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"நாங்கள் பெருமைப்படுகிறோம். பிரித்தானிய மக்களுக்கு அவர் தன்னால் முடிந்ததைச் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்." எனவும் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமனாரான நாராயணமூர்த்தி, இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இன்போசிஸ் துணை நிறுவனர் ஆவார்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்ட ரிஷி சுனக், இங்கிலாந்தின் பணக்கார தம்பதியாக உள்ளனர்.
இவர்களுடைய சொத்து மதிப்பு ரூ.5,960.45 கோடி என கூறப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலும் நாராயண மூர்த்தி தனது மகளான அக்ஷதாவுக்கு வழங்கிய சொத்துகள்தான்.
பிரித்தானியாவில் பணக்காரர்களில் ஒருவராக கருதப்படும் சுனக், இதுவரை தனது சொத்து மதிப்பை வெளியிடவில்லை.
கடந்த ஏப்ரல் 2022ல் அக்ஷதாவுக்கு பிரித்தானிய குடியுரிமை இல்லாததால், இன்போசிஸ் வருமானத்திற்காக பிரித்தானியாவிற்கு வரி செலுத்தவில்லை என சர்ச்சையானது. இதேபோல், சுனக் அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்திருந்தது சர்ச்சையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிர்வாகம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி-க்கு உதவ வேண்டும் என்பதற்காக இன்போசிஸ் நிர்வாகம் தனது ரஷ்ய வர்த்தகத்தை முழுமையாக மூடுவதாகவும், அந்நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தது.
இன்போசிஸ் நிர்வாகத்தின் முடிவுக்குப் பின்னால் நாராயணமூர்த்தி உள்ளார் எனப் பல கருத்துக்கள் அக்காலகட்டத்தில் வெளியானது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா - ரஷ்யா மத்தியில் வர்த்தகம் அதிகமானது தவற குறையவில்லை. இதேபோல் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யாவில் இருந்து வெளியேறிய ஓரே நிறுவனம் இன்போசிஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி-யிடம் இன்போசிஸ் பங்குகள் உள்ளது என்பதும் குறி்ப்பிடத்தக்கது.