இலங்கை மத்திய வங்கியின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள பிரதமர்
கோவிட் தொற்று நோய் நிலைமையில், நாட்டின் பொருளாதார ஸ்திரமான நிலையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டப்ளியூ. டி .லக்ஷ்மன் உட்பட மத்திய வங்கியின் பிரதானிகளுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத்திய வங்கியின் பொறுப்பை குறைவின்றி நிறைவேற்றுமாறு பிரதமர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை சம்பந்தமான இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் அதிகாரிகள் நாட்டின் பொருளாதார நிலைமை சம்பந்தமான பிரதமருக்கு விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் ஊழியர்கள் குழுவின் பிரதான அதிகாரி யோஷித்த ராஜபக்ச, பிரதமரின் மேலதிக செயலாளர் சம்பிந்த குலரத்ன மற்றும் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.