அவசர கூட்டமொன்றிற்கு திடீரென அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்
அரசின் சிரேஷ்ட அமைச்சர்களை அவசர கூட்டமொன்றிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அவசர சந்திப்பானது நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் காரணமாக நாளை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இடம்பெற வாய்ப்பில்லை எனவும் அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில்,ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்ததது.
இந்நிலையிலேயே குறித்த அவசர சந்திப்பிற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
திடீரென வெளிநாடு புறப்பட்டுச் சென்ற கோட்டாபய - பிரதமர் மகிந்த வசமாகும் பொறுப்புக்கள்
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri