ராஜபக்ச குடும்பத்துக்கு பயந்து நேபாளத்தில் அகதியாக கஷ்டப்படும் கட்சித் தலைவர்! தனக்கு நேர்ந்த கொடுமைகளை பகிரங்கப்படுத்தினார்...
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவாக செயற்பட்டதால் 'ஸ்ரீலங்கா பிரகதிசீலி பெரமுன' இலங்கை முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் ஆனந்த ஜெயக்கொடிக்கு ராஜபக்ச ஜுன்டாக்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக 17 வருடங்களாக நேபாளம் காத்மண்டு நகரில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜக்கச ஜுன்டாக்களால் அவருக்கு நேர்ந்த அநியாயங்கள் தொடர்பில் சூம் தொழில் நுட்பத்தின் ஊடாக இலங்கையில் இருந்து இயங்கும் வலையொளி தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள், நான் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு சர்வதேச அகதி. ஆனால் நேபாளம் அரசாங்கம் "நாங்கள் உங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் நீங்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" என்று கூறுகிறது.
நேபாளத்தில் படும் கஷ்டம்
அதனால் நாளொன்றுக்கு 10 டொலர் வீதம் அபராதம் செலுத்த வேண்டும். அந்த அபராதத்தைச் செலுத்தாமல் இந்த நாட்டை விட்டு வெளியேற அவர்கள் எவ் வகையிலும் அனுமதிப்பதில்லை.
எனக்கு அப்படி நாளொன்றுக்கு 10 டொலர் செலுத்துவதற்குப் பணம் இல்லை. இப்போது அது மொத்தமாகக் 65,000 டொலரைத் தாண்டியுள்ளது. இதுவரை நான் இலங்கைக்கு 16-17 ஆண்டுகளாக வரவில்லை.
என்னால் இலங்கைக்கு வர முடியாது. எப்படி வர முடியும் என்றால் நாம் 4-5 ஆண்டுகள் கோரிக்கை விடுத்துஇ மீண்டும் இலங்கைக்கு மட்டுமே திரும்புவதாக இருந்தால் இவர்கள் இந்த அபராதத்தை விலக்குவார்கள்.
ஆனால் எனக்கு இலங்கைக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. நான் அக்காலத்தில் ஒரு அரசாங்க அதிகாரியாகவும் ஒரு தொழிலதிபராகவும் இருந்தேன். "ஆனந்த என்டர்பிரைசஸ்" என்ற பெயரில் எனக்கு பாரிய ஒரு வணிகம் இருந்தது.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான ஒருவர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருக்கும் எனது தம்பி ஆகியோர் இங்கிரிய பிரதான வீதியை நோக்கியவாறு 100 பேர்ச்சசுக்கும் அதிகமான காணியில் இருந்த வீட்டை இடித்து அழித்து அதை வேறொருவர் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.
மேலும் சிலர் பிடித்துக் கொண்டு அங்கு வணிகம் நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு ஆடைத் தொழிற்சாலை இயங்குவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மகிந்த ராஜபக்சவை முதன் முதலில் சந்தித்தது
மகிந்த ராஜபக்சவை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். அதாவது 1986 ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் வாசுதேவ சகோதரர் மூலமாக எனக்கு அறிமுகமானhர். ஏனெனில்இ நான் அப்போது ஒரு தொழிற்சங்கத் தலைவராக இருந்தேன்.
எனது தொழிற்சங்கத்தின் ஒரு வழக்கு தொழிலாளர் திணைக்களத்தில் இருந்தது. அவ்வழக்கிற்கு எனக்கு ஒரு நல்ல சட்டத்தரணி தேவைப்பட்ட போதுஇ வாசுதான் மகிந்தவை எனக்கு அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் மகிந்த பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.
அவர் அப்போது மிகவும் ஆதரவற்ற நிலையில் இருந்தார். மிகவும் நல்லவர் பழக இனியவர் ஒரு உண்மையான சோசலிச மனிதர். அக்காலத்தில் மிகவும் நல்லவராக இருந்தார். அதனால் நான் அவருடன் நெருங்கிப் பழகினேன்.
அவரது பல விடயங்களுக்கு நாங்கள் அக்காலத்தில் ஆதரவளித்தோம். அவர் நடத்திய 'பாதயாத்திரை'இ 'ஜனகோஷ' போன்ற போராட்டங்களையும் நாங்கள் முன்னின்று நடத்தினோம்.

ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பொறுப்பற்ற விளையாட்டுத்தனமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் தானே. சந்திரிகா யுத்தத்தை முடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் சந்திரிகா அதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
அதற்குப் பிறகு நாங்கள் மகிந்தவின் மூலம் முயற்சி செய்தோம். அச்சமயத்தில் ஜே.வி.பி.யும் எங்களுடன் இணைந்தது. நமது கட்சியும் ஜே.வி.பி.யும் மேடைகளில் ஏறி 2005இல் மஹிந்தவை ஜனாதிபதியாக்கினோம்.
மகிந்த ஜனாதிபதியானார். அப்போது நான் இலங்கையில் அரசியல் கட்சியை நன்றாக நடத்தி வந்த காலம். நமது அரசியல் கட்சி அப்போது மிகவும் பிரபலம். நமது கட்சிக்கு ஒரு பிரபல பத்திரிகையும் இருந்தது.
யுத்தத்தை வென்ற பின்னர் அதை வைத்து நாட்டை சூறையாடினார். அதை எங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நாங்கள் ஜே.வி.பி.யுடன் இணைந்து நமது சித்தாந்தத்திற்கு எதிரானது என்றாலும் பொன்சேகாவை வெற்றிபெற வைக்கக் கடுமையாக உழைத்தோம்.
ஏற்பட்ட பிரச்சினை
அப்போதுதான் மகிந்தவிற்கும் எனக்குமிடையே பாரிய பிரச்சினை ஏற்பட முதன்மைக் காரணம் உருவானது. ஏனெனில் 2005இல் vமது கட்சியிலிருந்து மஹிந்தவிற்கு ஆதரவாக ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தினோம். மஹிந்த 2010இலும் அதை எதிர்பார்த்தார்.
ஆனால் அப்போது நான் கட்சியின் தலைவராக இருந்ததால் "ஆதரவு தர முடியாது" என்று கூறிவிட்டேன். ஆனால் மஹிந்த "ஸ்ரீலங்கா பிரகதிசீலி பெரமுனவும் எங்களுடன்தான் இருக்கிறது" என்று ஊடகங்களுக்கும் வானொலி-தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் செய்தி கொடுத்திருந்தார்.

ஆனால் நான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி "இல்லை நாங்கள் மகிந்தவிற்கு எந்தவிதத்திலும் ஆதரவளிக்க மாட்டோம்இ இது பொய் நாங்கள் ஜெனரலுக்குத்தான் ஆதரவளிக்கிறோம்" என்று பகிரங்கமாக அறிவித்தேன்.
இதனால் மஹிந்த கோட்டாபய பசில் ஆகியோருக்குக் கடும் கோபம் வந்தது. பசில் என்னை கடுமையாக மிரட்டினார். அவர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்கள். அந்த மனிதர்கள் இன்னமும் உயிரோடுதானே இருக்கிறார்கள். நான் சொல்லும் இக்கதையைக் கேட்டு அவர்கள் உண்மையை உரைக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அனோஜன் விவகாரம் தொடர்பில் அவரது சட்டத்தரணி கூறியுள்ள விடயம்! எழுத்துமூல தீர்ப்பு குறித்து வெளியிடப்பட்ட தகவல்