நிருபமாவின் பென்டோரா ஆவணங்கள் குறித்து கவனம் செலுத்தும் பிரதமர்
நிருபமா ராஜபக்ச(Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் (T.Nadesan) ஆகியோர் மறைத்து வைத்துள்ள சொத்துக்கள் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பென்டோரா ஆவணங்கள் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், இந்த பிரச்சினை சம்பந்தமாக இந்த வாரத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தை சேர்ந்த எவரும் உடனடியாக பதிலளிக்கவில்லை.
எவ்வாறாயினும் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் ஆகியோரின் வர்த்தக கொடுக்கல், வாங்கல் குறித்து ராஜபக்ச குடும்பத்த சேர்ந்த எவருக்கும் எதுவும் தெரியாது என ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.