அரச அதிகாரிகள் குறித்து கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்ட புதிய அரசாங்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத்தயங்கப் போவதில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பு
எங்கள் ஆட்சியில் யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். நாங்கள் ஏற்கனவே நேர்மறையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். இதுபோன்ற மாற்றங்கள் தொடரும்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் சிலர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து அரச ஊழியர்களை அழைத்து வர முடியாது. இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan