ஆனந்த தேரரின் தொலைபேசி உரையாடலை அடுத்து கொழும்பு விரையும் பிரதமர் மகிந்த
அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை அடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான தங்காலையிலும் மற்றும் நுவரெலியாவில் புதுவருட நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையிலேயே கொழும்புக்கு திரும்புகிறார்.
முருத்தட்டுவே ஆனந்த தேரர், மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி கலந்துரையாடல் நடத்திய பின்னரே பிரதமர் கொழும்பு திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே முருத்தட்டுவே ஆனந்த தேரர், மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு யோசனை நிறைவேற்றப்பட்டால் துறைமுக நகரம் ‘சீன குடியிருப்பாக மாறும் என்று விஜயதாச ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ச அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் யாப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விஜயதாச
ராஜபக்சவின் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam