அந்நியச் செலாவணியை பெறுவதற்கு பிரதமர் வழங்கியுள்ள அறிவுரை
இலங்கையின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணுவதற்கு இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையின் ஆயுர்வேதம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. இந்தத் தொழில் மூலம் அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கான முறைமை நடைமுறையில் இல்லை.
அண்டை நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மதிப்பீடு செய்த பின்னர், நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள உள்ளூர் ஆயுர்வேத மையங்களை திறப்பதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்க முடியும்.
தேசியப் பணி

ஆயுர்வேதப் பட்டம் பெற்ற அனைவரையும் இந்த தேசியப் பணியில் தீவிரமாக இணையுமாறு அழைப்பு விடுத்த பிரதமர், ஆயுர்வேத மருத்துவத்துறை இலங்கையின் மருத்துவத் துறையின் கோட்டையாக உள்ளது.
அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், மருத்துவத் துறையானது ஒரு மருத்துவ முறைக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam