பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

Ukraine Belarus Mahindarajapaksa Russo-Ukrainian War
By Kanamirtha Mar 02, 2022 12:49 PM GMT
Report

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு இன்று (02) பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்ட பிரதமர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய பெலாரஸிலுள்ள சுமார் ஆயிரத்து அறுநூறு மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் பெலாரஸிற்கு அருகிலுள்ள இலங்கை தூதரகமான மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடி சில வாரங்கள் கல்விப் பணிகளைத் தாமதிப்பது குறித்தும் அவர்களுக்கு ரஷ்யாவிற்கான விசாவினை பெற்று இலங்கைக்குச் செல்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US