பதினான்கு இலட்சம் அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
பதினான்கு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டம் விவசாயம், வளங்கள், கடற்றொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கான நீண்டகால விரிவான அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக தொகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அதற்கு அரச அதிகாரிகள் சிறப்பான ஆதரவை வழங்க வேண்டும்.
விவசாயத்துறையில் ஏற்படும் பிரச்சினை
கடந்த நெருக்கடியான காலத்தில் பதினான்கு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்க ஊழியர்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஏதேனும் குறைபாடுகள் காணப்படவில்லை.
எனவே அரச ஊழியர்கள் நாட்டுக்காக திறமையாக பணியாற்ற வேண்டும். ஆளுநர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விவசாயத் துறையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு குறிப்பாக விவசாயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
