பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த விடயம் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பணவீக்கம்
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் மறை 2.6 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதம் மறை 0.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் மறை 4.7 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் இந்த மாதம் மறை 6.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் மறை 4 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் மறை 4.2 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
