தோஷம் கழிக்க சென்ற சிறுமி வன்புணர்வு-ஆலயத்தின் பூசாரி கைது
தோஷம் கழிப்பதற்காக தொம்பே பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆலயத்தின் பூசாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 37 வயதான பூசாரி
நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவமை் தொடர்பாக 37 வயதான பூசாரியே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக சிறுமி வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூசாரி தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியது குறித்து சிறுமி சம்பவம் நடந்த சந்தர்ப்பத்திலேயே தனது தந்தையிடம் கூறியுள்ளதுடன் தந்தை அதனை பொருட்படுத்தவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தந்தையையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சந்தேக நபரான தந்தை மகளுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தோஷத்தை கழிக்கவும் வீட்டுக்கு தெய்வ பாதுகாப்பை பெற்றுக்கொள்ளவும் மகளை அழைத்துக்கொண்டு தொம்பே பிரதேசத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
சிறுமியை மூன்று வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேக நபர்
சிறுமிக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தை கழிப்பதாக கூறி, பூசாரி சிறுமியை மாத்திரம் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளார். தோஷத்தை கழிப்பதாக கூறி, தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்து, சிறுமியை சுமார் ஒரு மணி நேரம் ஆலயத்திற்குள் வைத்துக்கொண்டு மூன்று முறை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து தாயிடம் கூறியதை அடுத்து தாய், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சபையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை அதிகார சபை, தொம்பே பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி, பூசாரி மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரை கைது செய்துள்ளனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
