அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைகிறது
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை எதிர்வரும் காலங்களில் மேலும் குறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது
இதேபோன்று எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை, சீனி, பருப்பு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்வரும் சில மாதங்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இன்றி சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்று இறக்குமதியாளர் சங்கம், விசேட கலந்துரையாடலின் போது அமைச்சரிடம் தெரிவித்துள்ளது.