பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும்!கந்தசாமி குணரட்ணம்
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை குறைக்கப்படுமாக இருந்தால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என யாழ். மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை நாங்களாக அதிகரிக்கவில்லை. மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவுமே வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிட்டது.
மூலப்பொருட்களின் விலை குறைப்பு
தற்போது கூட மூலப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு எரிபொருள் சீராக கிடைக்கப்பெறுமாக இருந்தால் எமது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

மேலும் தற்பொழுது வெதுப்பகங்களுக்கு எரிபொருளினை பெறுவதற்கு யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்லூர் பிரதேச செயலகத்தினாலும்அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதாவது ஒரு வெதுப்பகத்திற்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒரு திட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சா.சுதர்சனால் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிலும் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
எனவே அந்த திட்டத்தினை ஏனைய மாவட்டங்களிலும் அல்லது நாடு முழுவதிலும் அந்த
திட்டத்தினை நடைமுறைப்படுத்துமிடத்து வெதுப்பகங்களுக்குரிய எரிபொருளினை இலகுவாக
வெதுப்பக உரிமையாளர்கள் பெறக்கூடிய நிலை ஏற்படும்.அவ்வாறான நிலை ஏற்படும் போது
மக்களுக்கான சேவையினை தடையின்றி முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan