சடுதியாக குறைக்கப்படும் பல பொருட்களின் விலைகள்! வெளியான அறிவிப்பு
கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள் மற்றும் பழங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறையும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதையடுத்து, 843 பொருட்களை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை திறக்கும் போது தனிநபர்கள் 100 சதவீத பணத்தை வைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை இரத்து செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கியின் நாணய சபை கடந்த ஆண்டு நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அந்நிய செலாவணி சந்தை பணப்புழக்கத்தை பாதுகாக்க கடன் பத்திரங்களின் கீழ் தயாரிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற/அவசரமற்ற தன்மை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு எதிராக 100 சதவீத பண வரம்பு வைப்பு தேவையை விதித்தது.
விலை குறைப்பு
நாணயச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவில், மத்திய வங்கி 2023 பெப்ரவரி 16 ஆம் திகதி மேலும் பல இறக்குமதிகள் மீது 100 வீத பண வைப்பு வரம்பை விதித்தது.
இருப்பினும், அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட முன்னேற்றத்துடன் இரண்டு கட்டளைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, தொலைத்தொடர்பு சாதனங்களான கையடக்க தொலைபேசிகள் மற்றும் நிலையான தொலைபேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள், டிஜிட்டல் கமராக்கள், ஹீட்டர்கள், விளக்குகள் மற்றும் அவன்கள், ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், ஜெர்சிகள் போன்ற துணைப்பொருட்களின் விலைகள் பிளவுசுகள், சூட்கள், டிராக் சூட்டுகள் மற்றும் நீச்சலுடைகள், பாதணிகள், கைக்கடிகாரங்கள், சன்கிளாஸ்கள், வீட்டு, மரச்சாமான்கள் பொருட்கள் மற்றும் ஆப்பிள்கள், திராட்சைகள், ஒரஞ்சுகள் மற்றும் உலர்ந்த பழங்கள் உள்ளிட்டவையின் விலைகள் எதிர்வரும் வாரங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.