2000 ரூபாவிற்கு விற்பனையாகும் பேரிக்காய்
நாட்டில் பேரிக்காய் கிலோ 1,600 ரூபா முதல் 2,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
எனினும், நுவரெலியா மற்றும் ராகலை பிரதேசங்களில் பேரிக்காய் பயிரிடும் விவசாயிகள் தமது விளைபொருட்களுக்கு இலாபகரமான சந்தையில்லை என வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு அமோக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் விலை குறைவு காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உற்பத்திச் செலவை ஈடுசெய்ய முடியாத நிலை
மோசமான விலையால் உற்பத்திச் செலவை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இடைத்தரகர்களிடம் இருந்து ஒரு கிலோ 700 ரூபாவுக்கு பெறுகின்றனர்.
பேரிக்காய் கிலோ ரூ.1,600 முதல் 2,000 வரை விற்பனை செய்து இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் இலாபம் ஈட்டுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.