எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறைக்கப்படும்: அமைச்சர் நளீன் தெரிவிப்பு
எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (02.06.2023) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் சில தினங்களில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை சுமார் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்
மூன்று நாட்களில் நுகர்வோருக்கு இந்த நிவாரணங்கள் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நிர்மாணத்துறை சார்பில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையே இந்த நிவாரணங்களைப் பெறுவதற்குக் காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமாகி வருவதாகவும், நுகர்வோருக்கு எப்போதும் நிவாரணம் வழங்குவதாகவும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri