இலங்கையில் 5000 ரூபாவை தாண்டிய ஒரு கிலோ மஞ்சளின் விலை
இலங்கையில் பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவற்றின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய கவ்பி, பயறு, உளுந்து மற்றும் மஞ்சள் போன்றவைகளின் விலை அதிகரித்துள்ளது.
பயறு போன்றவற்றுக்கு சந்தையில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மஞ்சள் ஒரு கிலோ கிராமின் விலை 4500 - 5000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கவ்பி ஒரு கிலோ கிராம் 600 ரூபாய் வரையிலும், உளுந்து ஒரு கிலோ கிராம் 1600 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
சந்தைக்கு அவசியமான அளவு உள்ளூர் உற்பத்திகள் இல்லாமையே இந்த அதிகரிப்பிற்கு காரணம் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தானியங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளமையினால் அவற்றை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இலங்கையின் முதல் கரிநாள்...! 9 நிமிடங்கள் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
