ஐ.எம்.எப்பின் தீர்மானம்: இலங்கையில் சடுதியாக அதிகரித்த பொருட்களின் விலைகள்! வெளியாகியுள்ள தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்திற்கு அமையவே அத்தியாவசிய பொருட்களின் விலையும், சேவைக் கட்டணங்களும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச நிர்வாகத்தில் தவறான தீர்மானங்களை எடுத்த தரப்பினர் தப்பித்து விட்டார்கள். எனினும் நாட்டு மக்கள் மீது பொருளாதார நெருக்கடி சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களில் எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலையும், மின்சாரக் கட்டணங்கள், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,