கடும் நெருக்கடியில் மக்கள்! பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க முடியாது என அறிவிப்பு
பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க முடியாது என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் உட்பட பெருமளவான பொட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்காரணமாக மக்கள் நெருக்கடிக்கு இலக்காகியுள்ளதுடன், டொலர் பிரச்சினை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அமெரிக்க டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க முடியாது.
அரசாங்கத்தின் அனுமதியின்றி நிறுவனங்கள் பொருட்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன.
எனினும் அரசாங்கத்தினால் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதனை ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
