நெல்லுக்கான விலை அதிகரிப்பு: அரிசி விலையில் தொடர்பில் வெளியான தகவல்
அடுத்த போகத்திலிருந்து நெல்லின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பா மற்றும் கீரிசம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அரிசியின் விலையில் எந்தவித அதிகரிப்பும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கீரி சம்பாவின் விலை அதிகரிப்பு
நெல்லின் விலையில் திருத்தம் செய்வது குறித்து ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும், குறிப்பாக நாடு நெல் 120 ரூபாயாக இருக்கும் என்றும், சம்பா நெல்லின் விலை 125 இலிருந்து 130 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதே சமயம், கீரி சம்பாவின் விலை விவசாயிகளின் தரப்பைப் பொறுத்து 132 இலிருந்து 140 ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam