மத்தளை விமான நிலையம் - கணக்காய்வு அறிக்கை மூலம் வெளிவந்துள்ள தகவல்
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் 39.3 பில்லியன் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
பயன்பாட்டின்மை காரணமாக விமான நிலையம் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்தநிலையில் 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் அந்த விமான நிலையம் 3.36 பில்லியன் செயல்பாட்டு இழப்பை பதிவு செய்துள்ளது.
செலவு உயர்வு
அதே ஆண்டில் 242.2 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே வருமானமாக கிடைத்த நிலையில், செலவுகள் 3.6 பில்லியனாக உயர்ந்துள்ளன. இந்த விமான நிலைய கட்டுமானத்திற்காக 36.5 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளை கையாளும் என எதிர்பார்க்கப்பட்ட விமான நிலையம், கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 3.2 இலட்சம் பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது.

புதிய பொது - தனியார் கூட்டாண்மை முறைமை
இந்த நிதிச்சுமையை கட்டுப்படுத்தும் நோக்கில், விமான நிலைய நிர்வாகத்தை இந்தியா - ரஸ்யா கூட்டமைப்புக்கு ஒப்படைக்கும் முன்திட்டத்தை, இலங்கை அரசு ரத்து செய்து, புதிய பொது - தனியார் கூட்டாண்மை முறைமைக்கு செல்ல முடிவு செய்துள்ளது.
இதன் கீழ் விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பணிகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடரும் நிலையில், சரக்கு சேவை, விமான பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் தனியார் முதலீட்டுக்கு திறக்கப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri