ஜனாதிபதி தேர்தலின் போது மூன்றாக பிளவடையும் சிங்கள வாக்குகள்: பழனி திகாம்பரம் சூளுரை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது சிங்கள வாக்குகள் மூன்றாக பிளவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாக பிளவடையும் காரணத்தினால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் நிச்சயம் வெற்றி ஈட்டுவார்
யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் நிச்சயம் வெற்றி ஈட்டுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் விரும்பும் விடயம்
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் கூறியுள்ளதாகவும், அதனையே மக்களும் விரும்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் ஆதரவினைக் கொண்டு ரணிலால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மொட்டு கட்சியே நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது. எனவே அவர்களினால் கூடுதல் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது என திகம்பரம் தெரிவித்துள்ளார்.
[FQ0AV2N ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
