மகிந்த குடும்பமே சிறை செல்லும் நிலை! இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் எம்.பி
நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்த வாரங்களில் மிக மிக ஆபத்தான பயங்கரவாத தடைச் சட்டம் விவாதத்திற்கு வருகின்றதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அப்போது அதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படும் நிலையில் பெரும்பான்மை வாக்குகளை அளிக்கக் கூடிய மகிந்த ராஜபக்ச குடும்பமே இந்த சட்டத்திற்குள் அகப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே ஜே.ஆர் ஜெயவர்தனவினால் நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை வைத்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைளின் கண்ணோட்டம்,