பயங்கரவாத தடுப்புச் சட்டம் இந்த வருடத்துக்குள் இரத்து! அமைச்சர் லால் காந்த உறுதி
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் நாங்கள் கடந்த காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அந்தச் சட்டத்தின் பாரதூரத்தன்மையை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, கொடுத்த வாக்குறுதியின்படி இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் நிச்சயம் இரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(11.11.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கஸ்ஸப்ப தேரர் விவகாரம்
மேலும் தெரிவித்ததாவது, "பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் தற்போது சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது.

நீதிமன்றத்தின் அறிவிப்பை நாம் முழுமையாகச் செயற்படுத்துவோம். பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் இந்தச் சட்டமூலமானது ஒருபோதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானதல்ல.
அனுராதபுரம் புனித நகரில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கஸ்ஸப்ப தேரர் விவகாரம் குறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
அதேபோல், மகாநாயக்க தேரர்களும் இது குறித்துக் கவனம் செலுத்தி ஆராய வேண்டும். பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஒருசிலர் செயற்படும் விதம் முற்றிலும் வெறுக்கத்தக்கது.
இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால்தான் பௌத்த மதம் ஒருசிலரால் விமர்சிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri