மஞ்சள் காவி கஸ்ஸப்பவின் உண்மை முகம் அம்பலம்!
சமகால அரசாங்கத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பலாங்கொட கஸ்ஸப்ப தேரரின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்ய போராடுவதாக தன்னை அடையாளப்படுத்திய கஸ்ஸப்பவின் உண்மையான நோக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவாக செயற்படுவதை பலாங்கொட கஸ்ஸப தேரர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு
கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள், திட்டமிட்ட வகையில் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்துடன் சுமுகமான நிலைப்பாட்டை முன்னெடுத்து வரும் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கும் கஸ்ஸப்ப தேரர் நேரடியாகச் சவால் விடுக்கத் தொடங்கியுள்ளார்.
மகாநாயக்க தேரர் வாக்குறுதியை வழங்கியிருந்தால், அந்த வாக்குறுதியை காப்பாற்ற தெரிந்திருக்க வேண்டும் என பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் தமக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ராஜபக்ச தரப்புக்கு ஆதரவாக செயற்படும் வகையில் அவருடைய நடவடிக்கைகள் இருப்பதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாமல் ராஜபக்சவின் பிரசாரப் பொறுப்பாளர் மிலிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினரும், தேசிய முன்னணி எனப்படும் அமைப்பும் கஸ்ஸப தேருக்கு எதிராக பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டு, தேரர் அரசாங்கத்தின் முகவர் என குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
you may like this video
ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri