இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நிலையிலிருந்து, தீவிர பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றத்தை நோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே இந்த வரவு - செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என அரசாஙகம் குறிப்பிட்டது.
மேலும், வருவாய் இலக்குகளைப் பாதிப்படையச் செய்யாமல் மக்களின் வாழ்வாதாரத்தைச் சுமையின்றி முன்னெடுக்க சில வரிக் குறைப்புகளைச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்றையதினம் ஜனாதிபதி வெளியிடவுள்ள அறிவிப்பு குறித்து முழு நாடும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது.
இவ்விடயம் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,