ஆபத்தாக வாகனங்களை செலுத்துவோருக்கு இலங்கை பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் மரணம் மற்றும் பாரதூரமான வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்தும் சம்பவங்கள்
மேலும், சட்டவிரோதமான முறையில் ஆபத்தாக மேலதிக உதிரிப்பாகங்களைப் பொருத்தி வாகனங்களை செலுத்துவதன் காரணமாக, அதில் பயணிப்பவர்களுக்கும் ஏனைய வீதிப் பயனாளர்களுக்கும் விபத்துக்கள், அசௌகரியங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்தும் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை பொதுமக்கள் இலங்கை பொலிஸாருக்கு அனுப்பிவைப்பதற்காக விசேட WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை 070 475 5600 என்ற WhatsApp இலக்கத்திற்கு பொதுமக்கள் அனுப்பிவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர அழைப்பு
மேலும், அவசர உதவிகளுக்காக 119 என்ற இலக்கத்தையும், கொழும்பு மாவட்டத்திற்கான அவசர அழைப்புப் பிரிவின் 0112 433 333 என்ற இலக்கத்தையும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வாகனங்களிலிருந்து புகை வெளியேறுவது அவதானிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுடன் வாகன இலக்கத் தகடு, சம்பவம் இடம்பெற்ற திகதி மற்றும் இடம் ஆகிய விபரங்களையும் 070 350 0525 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நடைமுறையிலுள்ள போக்குவரத்து சட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை