சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைச் சட்டம்! தமிழர்களுக்கு சிக்கலா?
சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டத்தை, காவல்துறைக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்காக நடைமுறைக்குக் கொண்டுவர நாடாளுமன்றமும் நடுவளரசும் அமைச்சர்களும் முன்மொழிந்துள்ளார்கள் என பெர்னில் இருக்கக்கூடிய சர்வமத பீடத்தில் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் மக்களின் செயற்பாடுகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடியவருமான கீர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைசட்டம் அமுலாக்கம் தொடர்பில் மக்களின் அனுமதி கோருகின்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இச்சட்டத்தை இவர்கள் எளிதாகக் கொண்டுவருகிறார்கள்? இதனது நோக்கம் என்னவாக இருக்கிறது என வினவிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் அச்சம் கொள்வது சுவிட்ஸர்லாந்திலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்னராகவே இது ஒரு தற்காப்பு நடவடிக்கையாகத் தெரிவு செய்யப்பட்ட நபர்களை, அடையாளம் காணப்பட்ட நபர்களை அல்லது அமைப்புக்களை இயங்குவதற்குத் தடுப்பதாகும்.
மேலும் இதனை ஒரு ஆபத்தான சட்டமாகப் புனித உரிமையாளர்கள் எதிர்நோக்குகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 10 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri