ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை தரப்படுத்தல்
ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை தரப்படுத்தல்
ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கையை Forbes சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக Forbes குறிப்பிட்டுள்ளது.
ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cape Cod-இல் இருந்து டொமினிக்கன் குடியரசு வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கலங்களை காண முடியும் எனவும் Forbes விளம்பியுள்ளது.
இவ்வாண்டின் ஆரம்பம் முதலே இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
முன்னதாக, Big 7 Travel சமூக ஊடகத் தரவுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் பதிவுகளை செய்யக்கூடிய 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தில் இருந்தது.
அத்துடன், Travel Triangle வௌியிட்ட, 2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்தது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
