திருகோணமலை மறைமாவட்ட ஆயர் மீதான அழுத்தம்! - சர்வதேச ஊடகம் தகவல்
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக சிவில் சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட அமைதி போராட்டத்தில் எதிராக ஒடுக்குமுறைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகம் (EINPRESSWIRE) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களுக்கும் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இன்று 3ம் திகதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள குறித்த போராடம் பொலிகண்டியில் முடிவடையவுள்ளது.
ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலருக்கும் இந்த பேரணியில் கலந்துகொள்வதற்கு நீதிமன்றால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, குறித்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களுக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பின்னவரும் விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெக்கப்படவுள்ளது. தமிழர்களின் கோவில்களை அழித்த பின்னர் பௌத்த விகாரைகளை நிறுவுவதன் மூலம் தமிழ் பகுதிகளில் நில அபகரிப்பு மற்றும் தமிழின் பாரம்பரிய, வரலாற்று இடங்களை சிங்கள பகுதிகளாக மாற்றுவது.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும் தகனம் செய்யப்படுகிறார்கள்.
மலையகத்தில் உள்ள தமிழர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் பகுதிகளின் இராணுவமயமாக்கல் தொடர்கிறது, சிங்கள மக்களுக்கு ஆதரவாக தமிழர்களின் வரலாற்று அடையாளம் அழிக்கப்படுகிறது, தமிழர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றும் சிங்கள குடியேற்றங்கள்.
தமிழ் கால்நடை உரிமையாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அவர்கள் வசிக்கும் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் கால்நடைகள் கொல்லப்படுகின்றன.
தமிழ் இளைஞர்களை குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி சிறையில் அடைக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்களுக்கு அரசாங்கம் தவறாமல் மன்னிப்பு வழங்கியுள்ளது,
ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன,
ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு பதில் அளிக்க மறுக்கிறது. தமிழர்கள் போரின் போது கொல்லப்பட்ட தங்கள் உறவுளை நினைவுகூரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளனர், இது நினைவு நிகழ்வுகளை மறுப்பதன் மூலமும், இறந்தவர்களின் கல்லறைகளை அழிப்பதன் மூலமும், நினைவுச் சின்னங்களை இடிப்பதன் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் தமிழ் ஊடகவியலாளர்களையும், இந்த முறைகேடுகளை எதிர்க்கும் தமிழ் சமூக ஆர்வலர்களையும் அரசாங்கம் குறிவைக்கிறது.
இது போன்ற காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
