தேசபந்து கைது செய்யப்படுவதை தவிர்க்க உதவியவர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று(20) உத்தரவிட்டுள்ளார்.
தென்னகோனின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்த, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு
முன்னதாக, துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்கக் கோரிய தென்னகோனின் நீதிப்பேராணை மனுவை மார்ச் 17 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்தில் தென்னகோனின் தொடர்பு உள்ளமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
