வாக்குச்சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும்: நாமல் திட்டவட்டம்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. யார் அந்தச் சின்னத்துக்குரிய வேட்பாளர் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
''எமது கட்சி முன்நிறுத்தப் பரிசீலிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும்( Ranil Wickremesinghe) ஒருவர்.

அவரோ அல்லது வேறு எவரோ ஒருவர் நிச்சயம் மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடுவார் என்பது உறுதி.
எமது கட்சி நிச்சயம் களமிறங்கும். ஆனால் வேட்பாளர் யார் என்பது தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

கட்சி உரிய சமயத்தில் அதைத் தீர்மானித்து ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        