கச்சதீவு விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராகும் தமிழக அரசு
இராமநாதபுரம் மன்னரின் வாரிசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து கச்சதீவு தமக்கே சொந்தம் என கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்று தமிழ் நாட்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (04.04.2024) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவு விவகாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த மோடி கச்சதீவு விவகாரம் குறித்து ஆராயாமல் தற்போது தேர்தலுக்காக கச்சதீவு விவகாரத்தை ஆராய்கின்றமை அவருக்கு உள்ள நோயின் உண்மை நிலையைக் காட்டுகின்றது.
அண்ணாமலை கூறுவது போல முன்னாள் முதல்வர் கருணாநிதி, கச்சதீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. இந்த பிரச்சினையை 2 ஆண்டுகள் ஒத்திவைக்க முடியுமா என்று தான் கூறினாரே தவிர ஒரு போதும் விட்டு கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு வழக்கு தொடர்ந்து, கச்சதீவு தமக்கே சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றது.
எனவே விரைவில் தமிழக அரசு, ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சமுதாயங்களையும் சந்தித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்” எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
