திடீரென ஹோட்டல்களுக்குள் நுழைந்து கண்காணிப்பில் ஈடுபட்ட ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலி கொக்கல மற்றும் அஹங்கம ஆகிய இடங்களில் பல சுற்றுலா ஹோட்டல்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
எவருக்கும் முன்கூட்டியே அறிவிக்காமல் நேற்று முன்தினம் காலை ஜனாதிபதி திடீரென ஹோட்டல்களுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற ஜனாதிபதி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட்டது.
இங்கு தங்கியிருந்த சில வெளிநாட்டவர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும் கலந்துகொண்டார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
