ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டம் வவுனியாவில் ஆரம்பம்
நாடு பூராகவும் 5000 குளங்களைப் புனரமைக்கும் ஜனாதிபதியின் நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்றையதினம் வவுனியா, செட்டிக்குளம், பெரியதம்பணை, ஆலடிக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்குளமானது 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.வவுனியா மாவட்டச் செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்திக்குழுத் தலைவருமான கு.திலீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.கே.மஸ்தான் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி. நீகால் சிறிவர்த்தன, கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல் அபேரத்ன, செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் சு.ஜெகதீஸ்வரன், வடக்கு பிரதேச சபை தலைவர் ச.தணிகாசலம், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், வவுனியா நகர பிரதேச செயலாளர் கமலதாஸன் மற்றும் கமக்கார அமைப்புக்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
