ஜனாதிபதியின் பதவிக்கால சட்டத்தில் திருத்தம்
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் தொடர்பாக அரசியலமைப்பின் இரண்டு சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நேற்று (09.07.2024) முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசியலமைப்பின் 30 (11)ஆவது பிரிவின் படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
அமைச்சரவை அங்கீகாரம்
அதேவேளை, அரசியலமைப்பின் உறுப்புரை 62 (11)இன் படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் சட்டமூலத்திற்கு பொது வாக்கெடுப்பு தேவை என்று அரசியலமைப்பின் 83 (ஏ) பிரிவு கூறுகிறது.
இந்நிலையில், இந்த இரண்டு கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கால வரம்பை ஐந்தாண்டுகளாக மாற்றியமைப்பதற்கான உரிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam