புதுக்குடியிருப்பில் இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு
முல்லைத்தீவில் (Mullaitivu) உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (10.07.2024) காலை புதுக்குடியிருப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு உயிரிழந்த 15 வர்த்தகர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள்
இந்நிகழ்வில், உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தினர், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல் - தவசீலன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
