ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நகர்வு

Government Of Sri Lanka Department of Prisons Sri Lanka Ministry of justice Sri lanka Harshana Nanayakkara
By Sajithra Oct 13, 2026 06:16 AM GMT
Report

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறையொன்றை அமைப்பது தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா தலைமையிலான குழு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. 

அதன் தொகுப்பை அமைச்சரவை ஆராய்ந்து வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை சிவில் ஆடைகளை அணியுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் வற்புறுத்தியமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து வினவியபோதே, ஹர்ஷன நாணயக்கார இந்த விடயத்தைக் குறிப்பிட்டதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அநுர நியமித்த குழு.. 

இது தொடர்பில் மேலதிக விளக்கமளிக்க அமைச்சர் மறுத்து விட்டதாகவும், இந்த பரிந்துரைகள் குறித்து அமைச்சரவை இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்று கூறியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நகர்வு | Presidential Pardons Justice Ministry Ganasara

அரசியலமைப்பின் 34(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகள், ஏனைய சட்டப்பூர்வ சட்டங்கள் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகள் என்பவற்றை ஆராய்வதற்காக 2025 ஜூன் 25 அன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் துரைராஜா தலைமையிலான இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை நீதித் துறை தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் துரைராஜா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேனாவிடம் கையளித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிற்காக ஆறு வருட கால கடுங்காவல் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை, இந்த ஆண்டு செப்டெம்பரில் உயர்நீதிமன்றம் இரத்து செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே அரசாங்கம் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களைக் கோரியிருந்தது.

ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மைத்திரி வழங்கிய 3 மன்னிப்புக்கள் 

2019 மே மாதத்தில் வழங்கப்பட்ட இந்த மன்னிப்பானது, மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் வழங்கிய சர்ச்சைக்குரிய மூன்றாவது விடுதலையாகும்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நகர்வு | Presidential Pardons Justice Ministry Ganasara

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கும், ரோயல் பார்க் கொலைக் குற்றவாளியான தொன் ஷிரமந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை உயர் நீதிமன்றம் 2024 ஜூன் மாதம் இரத்து செய்ததுடன் அவரைக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது. இருப்பினும், மன்னிப்பு வழங்கப்பட்ட உடனேயே அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதால் இன்னும் தலைமறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாதாள உலகக்கும்பலின் சக்திவாய்ந்த நபர் கொழும்பு துறைமுக நகரில் அதிரடியாக கைது

பாதாள உலகக்கும்பலின் சக்திவாய்ந்த நபர் கொழும்பு துறைமுக நகரில் அதிரடியாக கைது

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US