தலைமறைவாகியுள்ள கைதியால் ஜனாதிபதி அநுரவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொது மன்னிப்பின் கீழ் சர்ச்சைக்குரிய முறையில் விடுதலை செய்யப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதியின் பெயரில் நடைபெற்ற இந்த மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதுல திலகரத்ன என்ற சிறை கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சிறைத்தண்டனை
மோசடி மற்றும் 4 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் உயர் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதுல திலகரத்ன, ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதிக்கு தெரியாமல் மோசடியான முறையில் குறித்த நபரை, விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மோசடி
இந்நிலையில் தலைமறைவாகி உள்ள அதுல திலகரத்னவை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மற்றும் அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவரால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்த பல முக்கிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
