மாத்தளை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின
இறுதி முடிவுகள்
மாத்தளை மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேதமதாச 2,211 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,909 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 140,544 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 41.37 சதவீதமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 121,803 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 35.85 சதவீதமாகும்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 53, 829 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 15.84 சதவீதமாகும்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 10,327 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 3.04 சதவீதமாகும்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 339,734 ஆகும். 7921 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 347,655ஆகும்.
இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மாத்தளை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டது.
அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச 187,821 வாக்குகளை மாத்தளை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டார். இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 55.37% சதவீதமாகும்.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, மாத்தளை மாவட்டத்தில் மொத்தம் 134,291 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 39.59% சதவீதமாகும்.
மேலும் மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க மாத்தளை மாவட்டத்தில் 8,890 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நிலையில் இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 2.62% சதவீதமாகும்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 339,221 ஆகவும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 3,252 ஆகவும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 342,473 ஆகவும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 401,496 ஆகவும் பதிவாகியுள்ளது.
கடந்தமுறையுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுடன் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
தம்புள்ளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 53,299 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 36, 684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 16,285 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,263 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 143, 731ஆகும்.
2,104 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 113, 904ஆகும்.
மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 116,008 ஆகும்.
ரத்தோட்ட தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்ட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 26,528 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 31,358 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12,567 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,245 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மாத்தளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 27,693 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 25,117 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11,712 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,691 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
லக்கல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் லக்கல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 20,838 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 24,828 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,022 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,756 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தபால் மூல வாக்கு
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,243 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 372 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 128 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |