மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதி
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசைச் சீர்குலைக்கும் வகையில், சில குழுக்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன என்று ஜனாதிபதிக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் குழு
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய புதிய பொலிஸ் குழுவொன்ற மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதியின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
