ரணிலின் முடிவு வெளியாகும் போது இலங்கை அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டவுடன் பலர் அவருடன் வந்த இணைந்த கொள்வார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் அரசாங்கத்தில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல ஊகங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அத்தகைய மாற்றம் ஏற்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தனிநபர்கள் எமது வரிசையில் இணைவார்கள்
உண்மையில், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்திற்கு செல்வதென்பது கணிசமான கவனத்தை ஈர்த்த ஒரு விடயம்.
இந்த மாற்றம் உடனடி மற்றும் எதிர்பார்த்ததை விட விரைவில் நிகழக்கூடும் என்பதை அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் போது பல தனிநபர்கள் எமது வரிசையில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நபர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொழில்நுட்பத் தொடர்பைப் பேணுகின்ற அதேவேளையில், எங்களது நோக்கத்திற்கான அவர்களின் ஆதரவு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அரசாங்கத்திற்கு தங்கள் முழு ஆதரவையும் அளித்து வருகின்றனர். இது மறுசீரமைப்பைக் குறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
