ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோட்டாபய! பசிலுக்கு ரகசியமாக சொல்லப்பட்ட செய்தி
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானம் சிறந்ததாக அமையுமா என குறிப்பிட்டு எதிர்ப்பு வெளியிட்டேன் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலநது கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாரிய போராட்டத்துக்கு பின்னர் மீண்டெழுந்துள்ளோம். உரப் பற்றாக்குறை மற்றும் விவசாயத்துறை வீழ்ச்சிக்கு பின்னரே அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதுவே உண்மை. தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விவசாயத்துறை வீழ்ச்சி இயற்கை காரணிகளால் ஒன்றும் ஏற்படவில்லை. சேதன பசளை திட்டத்தை ஒரே கட்டமாக நடைமுறைப்படுத்தியதால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் நாளடைவில் பாரிய மக்கள் போராட்டமாக எழுச்சிப் பெற்றது.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானம் சிறந்ததாக அமையுமா என குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தேன்.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்னர் அவர் ஜனாதிபதி வேட்பாளர் என தற்போது எமக்கு எதிராக அரசியல் செய்யும் விமல் வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோர் மக்கள் மத்தியில் குறிப்பிட்டு மக்களை ஒன்றுத்திரட்டினார்கள்.
இவ்வாறான நிலையில் கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு அப்போதைய எதிர்க்கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களமிறக்க வேண்டியிருக்கும்.
பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எழுந்த சவால்களை வெற்றிக் கொள்ள எமது அரசாங்கம் தோல்வியடைந்ததன் போராட்டம் தீவிரமடைந்தது. அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri