நான் தயார்: ஏனையோரும் பங்கேற்கவேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கோரிக்கை
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கு இடையில் ‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்யவிருக்கும் விவாதத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை ‘சர்வஜன பலய’ வின் ஜனாதிபதி வேட்பாளர், தொழிலதிபர் திலித் ஜயவீர உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதத்தில் பங்கேற்க மார்ச் 12 இயக்கம் விடுத்த அழைப்பை உத்தியோகபூர்வமாக ஏற்கிறேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
திலித் ஜயவீரவின் கோரிக்கை
இதன் மூலம், ஜனாதிபதி பதவிக்கு வாக்களித்தால், தாம் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் கொள்கைகள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலைக் காண இலங்கையர்களுக்கு இந்த விவாதம், புதுமையான அனுபவத்தை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவாதத்தில் கலந்துகொள்ள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர்கள் அனைவரும் இந்த விவாததத்தில் பங்கேற்கவேண்டும் என்று திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
